பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசனின் அருகில் மாணவர்களாக இருந்து பாடங் கேட்டவர்களில் சிலர், அவரைப் போல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரை நூற்றுக்கு நூறு பின்பற்றிக் கடைசியில் அவரோடு கலந்து கரைந்து விட்டனர். அந்த இளங்கவிஞர்களின் படைப்புக்கள் பாரதிதாசன் படைப் புக்களின் நகல்களாகி விட்டன.

சுரதா என்று பிற்காலத்தில் அழைக்கப்படும் சிக்கல் ராஜகோபாலன் பாரதிதாசனை வந்தடைந்த போது இருபது வயது கூட நிரம்பாத இளைஞர். அந்த வயதில் அவருக்கென்று தனிப்பட்ட கவிதைக் கொள்கை எதுவும் உருவாகியிருக்க நியாயமில்லை. அவர் அப்போது கைபடாத பச்சைக் களிமண், அப்போது பாரதிதாசன் சுரதாவுக்குக் கொடுத்த வேலை, தாம் எழுதும் கவிதைகளை நகல் எடுப்பதுதான். தமிழ்க் கவிஞர்களுள் சு ர த ா வி ன் கையெழுத்து மிகவும் அழகானது என்பது குறிப்பிடத் தக்கது. தெளிவான அழகிய சுரதாவின் கையெழுத்து, பாரதிதாசனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. பாண்டியன் பரிசை மூன்று தடவை நகல் எடுக்கச் சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எப்போதுமே ஒரு பாடலைப் படிப்பதைவிட, எழுதும் போது அதில் ஒரு லயிப்பு ஏற்படும். பாரதிதாசன் பாடல் களை ஓயாமல் நகலெடுத்து, அவற்றில் ஆழமான மெய் மறந்த லயிப்பும், ஈடுபாடும் சுரதாவுக்கு ஏற்பட்டுவிட்டது. நகல் எடுக்கும் போதெல்லாம் பாரதிதாசன் பாணியும், அவர் கையாளும் புதிய உத்திகளும் அவரைச் சிந்திக்க வைத்தன. பிறர் பாடல்களோடு பாரதிதாசன் பாடல் களை ஒப்பிட்டுப் பார்த்து வியந்தார். ஆனால் பாரதி தாசனைப் போல எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. பாரதிதாசனைப் போல் அல்லாமல், அவரிடமிருந்து வேறுபட்டும், அவரைவிடச்

41