பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லவர்கள் என்கருத்தை ஆத ரிக்க

நாலைந்து வைதீக வெறியர் மட்டும்

வல்லமையே இல்லாமல் கூவு கின்றார்;

வாழைப்பூ வேதாந்தம் பேசுகின்றார்

வரப்பு வயலில் உழவு செய்வோரை வரப்புச் சாமிகள்’ என்று குறிப்பிடுவதும், தலைக் குனிவை உண்டாக்கும் மடமைத் தத்துவத்தை வாழைப்பூ வேதாந்தம்' என்று குறிப்பிடுவதும் சிந்தித்து மகிழத் தக்க சொல்லாட்சிகள்.

புலவர் பெருஞ்சாத்தன் பல குழந்தைகளைப் பெற் றெடுத்த தனது மனைவியைப்பற்றிக் குமண வள்ளலிடம்: குறிப்பிடும்போது

'பலசுளைகள் நிறைந்திருக்கும் கார ணத்தால்

பலாப்பழத்தைப் பலவென்றார்; அதுபோல் மங்கை

பலபுதல்வர் தமையின்றாள் என்ப தாலே

பலாமனைவி என் மனைவி' - என்று பாடுகிறான்.

பலா மனைவி புதிய சொல்லாட்சி.

8 தொலைவு உவமைகள்

உவமை கவிதையின் மிக இன்றியமையாத ஒர் அங்கமாக ஆதிநாள் தொட்டுக் கருதப்பட்டு வருகின்றது. சிறந்த உவமைகள் ஒரு கவிஞனின் சிந்தனை ஆற்றலுக்கும் கற்பனை வளத்துக்கும் சான்றாக விளங்குகின்றன. தொல்காப்பியர் காலத்தில் உவமையே அணியாகக் கருதப்பட்டது. அதனால்தான் செய்யுள் அலங்காரம் பற்றிக் கூற வந்த இயலுக்கு உவமவியல்' என்று அவர் பெயரிட்டார். இந்த உவமை அணியே பிற்காலத்தில் தோன்றிய அணிகளுக்குத் தாயாக விளங்கியது. குறுந் தொகையில் பாடிய புலவர்களுள் பதின்மூவரின் பெயர்கள்

& Far fetched Simiies.

57