பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் பாடலில் கூறிய உவமைகளாலேயே வழங்கிப்படு கின்றன. அவர்களுள் செம்புலப் பெயல் நீரார் எல்லா ராலும் அடிக்கடி குறிப்பிடப்படுபவர். எனவே உவமை யின் சிறப்பு புலனாகும்.

பிறமொழிக் கவிஞர்களும் உவமைக்குக் கவிதையில் சிறப் பிடம் தந்து போற்றியிருக்கின்றனர். மெய்விளக்கக் கவி ஞர்கள் தமக்குமுன் இருந்த கவிஞர்கள் கூறாத புதிய உவமைகளைத் தேடிப்பிடித்துக் கூறுவதில் அதிக ஆர்வம் காட்டினர். அதுவும் சிந்தனையைத் தொலைவில் ஒட விட்டு மிகவும் நுட்பமான உவமைகளைக் கூறுதல் அவர் கள் இயல்பு. மேலை நாட்டுக் கவிதைத் திறனாய்வாளர் கள் இவ்வித உவமைகளைத் தொலைவு உவமைகள் என்றே பெயரிட்டு அழைத்தனர்.

ஆங்கில மெய்விளக்கக் கவிஞர்களின் பிதாமகன் என்று கருதப்படும் ஜான் டன் (John Donne) தொலைவு உவமை கள் கூறுவதில் ஆற்றல் மிக்கவன். அவன் கூறிய தொலைவு உவமைகளுள், காதலர்களுக்கு உவமையாகச் சொன்ன ஈயும் (Flea), கவராயமும் (Compass) மிகவும் பாராட்டுப் பெற்றவை. நான் இவ்விடத்தில் வேறு ஓர் உவமையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். *

ஜான் டன் எழுதிய பாடல்களுள் காலை வணக்கம்' (The Good - Morrow) என்ற பாடலும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் ஒரு பெண்ணிடத்தில்தான் கொண்டிருக்கும் தெய்வீகக் காதலைப் பறறிக் (Spiritual Love) குறிப்பிடு கிறான். மெய்விளக்கத் தத்துவப்படி, எந்த ஒரு பொருளும் அதன் மூலப் பொருட்களுள் முரண்பாடு தோன்றும்போது அழிகிறது. ஆனால் இவர்கள் காதலோ ஒரே மூலப் பொருளால் ஆக்கப்பட்டு ஒரே மாதிரியாக இருப்பதால் அதற்கு அழிவில்லை என்று குறிப்பிடுகிறான்.

58