பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானையது வீழ்ந்துடைத்தால் அப்பா னைக்குள்

பரவிநின்ற பழங்காற்றவ் விடத்தை விட்டு வாணவெளி செல்வதில்லை; அதனைப் போன்று

வைகுண்டம் எவர்மூச்சும் செல்வதில்லை. என்று பாடுகிறார். இதில் வைகுண்டம் எவர்மூச்சும் செல்வதில்லை என்ற கருத்தை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் "பானையுடைந்ததும், அதில் பரவியிருந்த காற்று வானவெளியை அடைவதில்ல்ை’ என்று சொல்லுகிறாரே, அது எப்படி? ஏன் காற்று வானவெளியை அடையாது? பூமிக்குமேல் இருப்பதெல்லாம் வானவெளிதானே! மேலும் காற்று வெப்பத்தால் லேசாகி வானவெளிக்குச் செல்வது இயல்பான நிகழ்ச்சிதானே! பானைக்குள் பரவியிருந்த காற்றுக்குமட்டும் விதிவிலக்கு உண்டா? மீண்டும் குழம்பு கிறோம். இவை எல்லாவற்றையும்விட விநோதமான ஒரு குழப் பத்தைக் கவிஞர் மங்கை மாசா என்ற பாடலில் மிகச் சுவையாகச் சித்தரிக்கிறார். அப்பாடல், வெவ்வேறு பெயரில் பல பிறவிகளை எடுத்துள்ளது.

கான் சாகிப் என்ற வீரன் தக்கோலம் என்ற ஊரை வெற்றி கண்டு, கொக்கூரைக் குருகூரைச் சூறையாடி, எக்காள மிட்டபடி தன் வீரர்களோடு வந்து கொண்டிருக்கிறான். அப்போது மாசா என்ற நாட்டுப்புறப் பெண்ணொருத்தி புற்கட்டைத் தலையில் ஏந்திய வண்ணம் எதிரில் வருகிறாள். அவள் கட்டான மேனியில், கான் சாகிபின் உள்ளம் ஒட்டிக் கொள்கிறது. அவள் சம்மதத்தைப் பெற்று அவளைக் குதிரையின்மீது ஏற்றி வைத்துக் கொண்டு புறப்படுகிறான் கான் சாகிப்.

செல்லும் வழியிலேயே கான் சாகிப்புக்குக் காதல் பசி அதிகமாவிட்டது. அவளை உடனே அனுபவித்துவிட வேண்டும் என்ற அவா அவனை உந்தித் தள்ளுகிறது.

7 I