பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுப்பதில்லை, இவரை வளர்த்து விட்டது திராவிட இயக்கம் என்றாலும், தம்மை ஓர் இயக்கக் கவிஞனாக இவர் முத்திரை குத்திக் கொள்ள விரும்பவில்லை.

'மெய்விளக்கக் கவிஞர்கள் மக்களியல்பை ஊன்றி நோக் கும் திறனாய்வாளர்களாக இருந்தார்களே அன்றி, அவ்வியல்புகளோடு ஒன்றி வி டு பவர் க ளா க இல்லை. . சமுதாயத்திலுள்ள நன்மை தீமைகளைக் கண்டு உணர்ச்சி வசப்படாமல், ஒய்வு நேரப் பார்வையாளர்களாக இவர்கள் விளங்கினர். சமுதாயத்தின் நடைமுறைகள், மக்கள் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி ஆர்வமோ, அக்கறையோ காட்டாமல் அவற்றைப்பற்றி மேற்போக்கான தம் கருத் துக் க ைள க் கூறும் இன்பத் தேவதைகள் இவர்கள். இவர்கள் சமுதாயத்தின்பால் காட்டுகின்ற அன்பும், வருத்தமும் ஆழமற்ற நிலையில் இருக்கும். இவர்கள் விருப்பமெல்லாம் மற்றவர் சொல் லாதவற்றைத் தாம் சொல்ல வேண்டும் என்பதுதான்' என்று ஒரு மேலை நாட்டுத் திறனாய்வாளர் குறிப்பிடு கிறார்.

சுரதாவைப் பொறுத்தவரையில், இந்த வி ள க் க ம் அவருக்குப் பொருந்துவதாக உள்ளது. சுரதாவுக்கென்று தனிப்பட்ட முறையில் எந்தக் கொள்கையும் கிடையாது. எந்த ஓர் இனத்திலும் இவருக்கு ஈடுபாடு கிடையாது. கவிதைதான் இவர் கொள்கை. கவிஞனுக்கென்று தனிப்

“They wrote rather as beholders than partakers of his man nature; as beings looking upon good and evii, impassive and at leisure; as epicurean deities, making remarks on the actions of men, and the vicissitudes of life, without interest and without, emotion Their courtship was void of fondness, and their tamentation of sorrow, Their wish was only to say what they hoped had been never said befo ře. — bid

74