பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஃபியும் பொடியும் கேட்டார்; தருவித்துக் கொடுத் தேன். எழுதுகோலையும், தாளையும் கையில் கொடுத்து 'தலைமைக் கவிதை எழுதுங்கள்' என்று சொல்லி விட்டு, அவருடைய அறையை வெளியில் பூ ட் டி வி ட் டே ன், மற்றவர்கள் உள்ளே சென்று அவர் வேலையைக் கெடுத்து விடக் கூடாது என்பதற்காக.

கவியரங்கம் பிற்பகல் 4 மணிக்குத் தொடக்கம். 3 மணிக்கு அறைக்கதவைத் திறந்து விட்டேன். இதோ ஆச்சு! கடைசிப் பாட்டு எழுதிக்கிட்டிருக்கிறேன். சே! கவிதை எவ எழுதுவான்! விறகு பொளக்கற மாதிரி அலுப்பா இருக்குது ' என்று முணகிக் கொண்டே எழு தி னார். சரியாக 4 மணிக்கு நானும் சுரதாவும் கவியரங்க மேடை யில் ஏறினோம்.

'அப்பா இப்பத்தா எனக்கு உசிரே வந்தது!’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டார் கவிஞர் கருணானந்தம். அன்று சுரதா பாடியவற்றுள் கொசுக்கடித்து யானை யொன்றும் சாவதில்லை என்ற உவமை என் உள்ளத்தில் உடனே அப்பிக் கொண்டது.

கவியரங்கம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது. நானும் சுரதாவும் வேறு பல நண்பர்களும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். அந்தி யிருள் கவியத் தொடங்கியிருந்தது.

டிரைவர்! காரை கழாஅர்த் துறைக்கு ஒட்டு' என்றார் சுரதா, வண்டி சற்று நேரத்தில் காவிரிக் கரையை அடைந்தது. முசிரிக்கருகில் மைல் க ண க் கி ல் பரத் திருந்த அகண்ட காவேரி, இளைத்துப்போய் அவ்விடத்தில் ஒரு வாய்க்காலாக ஒடிக் கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் கழாஅர்த் துறை' என்று பெயர்ப் பலகை காணப்பட்டது.

8 I