பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவருக்கு உதவியாக இருந்த இவரது சிறகுகளே (கஞ்சா, அளவற்ற மதுப்பழக்கம்) கடைசி நாட்களில் இவரை முடக்கிப்போட்டு விட்டன. பக்கவாதம், இவரை முடக்கிப் போட்டுப் படுக்கையில் தள்ளிவிட்டது. சிபிலிஸ் இவரைச் சிதைத்துவிட்டது.

நீண்டநாள் கஞ்சாப் பழக்கத்தின் கடைசி மைல்கல், தலை சுற்றலும் (Vertigo) பைத்தியமும்தான். தன் கடைசி நிலையைப்பற்றிக் குறிப்பிடும்போது 'இன்பமும் அதிர்ச்சி யும் கொண்ட இழுப்பு ந்ோய் (Hysteria) எனக்குப் பழக்க மாகிப் போய்விட்டது. தொடர்ந்து தலைசுற்றலால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். 23-1-1862 ஆம் நாளாகிய இன்று, எதிர்பாராத ஒர் எச்சரிக்கை எனக்குக் கிட்டியது. பறந்து செல்லும் பைத்தியச் சிறகு (வீச்சின் காற்று, என்மீது படிந்து சென்றதை நான் உணர்ந்தேன்’ ’ என்று குறிப்பிடுகிறார்.

தன் பெயரைக்கூட நினைவுகூர முடியாத நிலையிலும், நிலைக் கண்ணாடியில் த ன் ெசா ந் த முகத்தையே அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையிலும், புறக்கணிப்புக்கு ஆளாகி, ஆதரவற்றுத் தமது கடைசி நாட்களைப் பாரிசில் கழித்தார். மிகச் சிறந்த கவிஞரான போதலேரைப் புகழ்பெற்ற பிரெஞ்சு இலக்கியக் கழகம் { French Acadamy ) உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. அந்த வேதனையைத் தாளாத அவர், பாரீசை விட்டு நீங்கி, பெல்ஜியத்தில் சொற்பொழிவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அலைச்சல் அவர் உடலை மிகவும் பாதித்தது. 1867 இல் பாரீஸ் மருத்துவ மனையொன்றில் உயிர்துறந்தார்.

தாம் செய்யும் எந்தப் பணியையும், செப்பமாகவும், திருத்தமாகவும் செய்யவேண்டும் என்ற கொள்கையுடை

97