பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


குறும்புக்காரக் குமரன்

குமரன் என்னும் சிறுபையன் குறும்புத் தனத்தில் பெரியவனாம் அமர்ந்தி ருந்தான் நீர்க்குளத்தின் அருகில் உள்ள மரக்கிளையில். வீடு தோறும் நீர்வழங்கும் வேலைக் காரி வேலாயி பாடிக் கொண்டே நீரெடுக்கும் பானை கொண்டு வந்தாளே. மண்ணால் ஆன பானையதை மணிக் குளத்தில் தானமிழ்த்தி உண்ணும் நீரை மொண்டவளும் உயரத் தலையில் வைத்தாளே. மண்ணால் ஆன பானையிலே வாகாய்த் துளையொன் றிட்டதனைக் கண்ணால் காண வேண்டுமெனக் கையில் எடுத்தான் கவண்வில்லை. பாய்ந்து சென்ற கவண் உருண்டை பானை ஒட்டைத் துளைத்ததுவே வாய்ந்த துளையின் வழிந்தண்ணிர் பீச்சிப் பாய்ந்து வந்ததுவே!