பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


பீச்சிப் பாயும் நீர்கண்டு பெரிதும் குமரன் களிப்படைந்தான் சேச்சே! என்ன நேர்ந்ததெனத் திரும்பிப் பார்த்தாள் வேலாயி. இறக்கிப் பார்த்தாள் பானையினை இதயம் நொந்து போனாளே. பரக்கப் பரக்க விழித்தாளே பானைக் கென்ன செய்வதென. புதிய பானை வாங்கிவரப் போது மான காசிருந்தால் எதுநேர்ந் தாலும் கவல்வாளோ? இதயந் துடித்து நிற்பாளோ? கவலைப் பட்டு நின்றவளைக் கண்டு குமரன் மனம் நொந்தான் தவறு தன்னால் நேர்ந்ததெனத் தானும் துயரம் கொண்டானே. விரைந்து நடந்து சென்றான்தன் வீட்டு மச்சில் அடுக்கடுக்காய் இருந்த புதிய பானைகளில் எடுத்து வந்தான் ஒன்றினையே. விழித்துக் கொண்டு நின்றிருந்த வேலாயி யிடம் கொடுத்தானே. களித்து நன்றி ததும்பிடவே கனிந்து போற்றிப் பேசினளே.