பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43



தேரை மறித்த வேர்

சின்னஞ் சிறிய ஊரிலே திருநா ளொன்று வந்ததே திருநாளன்று தேரிலே தெய்வம் வீற்றி ருந்ததே. தெய்வம் பெரிய தெய்வமாம் தேரும் பெரிய தேரதாம் தேரை யிழுக்கக் கூட்டமாய்ச் சேர்ந்த அன்பர் மிகுதியாம் வரிசை யிரண்டு நின்றதாம் வடத்தை யிழுத்துச் சென்றதாம் சென்ற போது கூடவே தேரும் ஒட்டம் கொண்டதாம். ஓடிச் சென்ற தேரதே ஓரிடத்தில் நின்றதாம் நின்ற அங்குக் குறுக்கிலே நீண்ட வேரொன் றிருந்ததாம் தேரின் உருளை வேரின்மேல் ஏற முடியா வில்லையாம் ஏற முடியா தங்கேயே இருக்க நேர்ந்து விட்டதாம்.