பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


'என்னைப் படைத்திவ் விடத்திலே இருக்கச் செய்த தெய்வமே, இருப்ப தென்றன் பிழையதோ இல்லை, உன்றன் பிழையதோ? 'உன்றன் பிழையைத் தீர்க்கவே உயிரை நானும் இழக்கவோ இந்த நீதி நாட்டவோ இங்கு வந்தாய் தேரிலே??? மரத்தின் கேள்வி கேட்டதும் மறைந்த தந்தத் தெய்வமே வருத்தி வெட்ட முனைந்தவர் மனத்தே திகிலும் பிறந்ததே. வேரை வெட்ட முனைந்ததால் விரைந்து தெய்வம் மறைந்ததே வேண்டாம் தெய்வம் வருந்தவே வெட்ட வேண்டாம்?? என்றனர் தேரைப் பின்னால் இழுத்தனர் திருப்பிக் கொண்டு சென்றனர். ஊரில் உள்ள கோயிலின் உள்ளே கொண்டு நிறுத்தினர். அங்கே தெய்வம் இருந்ததே அழகு வடிவாய் இருந்ததே பொங்கி இன்பம் நிறையவே போற்றி நின்றார் அன்பரே! ★大 ★