பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


வேட்டையாடச் சென்றாராம் வெள்ளைக் காரத் துரைஒருநாள் காட்டு வழிதான் தவறியதால் கால்கள் கடுக்க அலைந்தாராம். வழியைத் தேடிக் களைப்புற்று வாடிச் சோர்ந்து போனாராம் ஒளியைத் தந்த கதிரவனும் ஒடி ஒளிந்து கொண்டானாம். இருட்டில் அங்கோர் குடிசையிலே எரியும் விளக்கைக் கண்டாராம். சுருட்டுப் பற்ற வைத்தபடி துரையும் சென்றார் அதுநோக்கி. ஐயா ஐயா என்றழைத்தார் அந்த வெள்ளைத் துரைப்பெருமான் பைய வெளியில் வந்தொருவன் பார்த்தான் எட்டிப் பார்த்தானே! நகரம் செல்லும் வழிசொன்னால் நன்றி யுடையேன்” என்றுரைத்தார் மிேகவும் தொலைவில் உள்ளதையா மேலும் இருட்டு நேரமிது விலங்குத் தொல்லை மிகவுண்டு விடிந்த பிறகு போய்விடலாம் கலங்கா துள்ளே வந்திடுவீர்?? கனிவாய் அழைத்தான் அம்மனிதன்.