பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


சோறு வடித்தான்; மான்கறியும் சுட்டு வைத்தான், வெள்ளையரும் வேறு பாடு கருதாமல் விருந்தைச் சுவைத்து மகிழ்ந்தாரே! கயிற்றுக் கட்டில் ஒன்றினிலே கவலை யின்றித் தூங்கியவர் வெயிலின் கதிர்கள் குடிசையுளே விழுந்த பிறகு கண்விழித்தார்! பொழுது புலர்ந்தது; நகருக்குப் போகும் வழியைச் சொல்லிடுவாய்? எழுந்து நின்று துரைகேட்டார் இருங்கள்: நானும் வருகின்றேன்!?? காட்டின் எல்லை வரையந்தக் கருப்பன் துரைக்குத் துணைசென்றான் தோட்டம் ஒன்றின் அருகினிலே துரையை விட்டுத் திரும்பினனே! வேற்று நாட்டான் எனக்கேநீ விருந்து வைத்தாய்; துணைவந்தாய் போற்று கின்றேன் உன்பண்பைப் பொன்போல்! நன்றி செலுத்துகிறேன்.

ஏதும் உதவி வேண்டுமெனில்

என்னைக் கேட்பாய்?? என்றுரைத்தார் பேதம் காட்டா திருந்தாலே பெரிய உதவியதுவாகும்! шт—4