பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


கூட வாழும் பறவைகளை - நீ கொடுமைப் படுத்து கின்றாயாம்! வாடப் பிறரைத் துன்புறுத்தி-இனம் வளர்த்துக் கொள்ளத் துணிந்தாயாம்! கூடு கட்டிக் கொள்ளாமல்-நீ குடும்பம் நடத்து கின்றாயாம் பாடு பட்டே உழைக்காமல்-நீ பலனைத் திருடிக் கொண்டாயாம்! முட்டை யிட்டாய் பிறர்கூட்டில்-அது மோசம் அன்றோ கருங்குயிலே இட்ட முட்டை தமதென்றே-அவை இருந்து நம்பி அடைகாக்கும். பாசத் தோடே அடைகாத்தே - அன்பும் பற்றும் கொண்டே காப்பாற்றி மோசம் போன தறியும் கால்-மனம் முறிந்து போவ தறியாயோ? இட்ட முட்டை தனை நீயே - சொந்த இடத்தில் வைத்தே அடைகாத்தால் நட்டம் என்ன வந்து விடும்?-பிறர் நலத்துக் கிடையூ றேன்செய்தாய்? பொரித்து வெளியில் வந்தவுடன்-உன் பொல்லாக் குஞ்சு பிறகுஞ்சைச் சரித்துக் கீழே தள்ளி விடும்-அவை சாகச் செய்யும் அஞ்சாமல்: