பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. முருகுசுந்தரம்/l09

நாயக்கர் பங்களாவில் படக்கம்பெனியின் அலுவலகம் இருந்தது.

கவிகாளமேகம் படப்பிடிப்பு கோடம்பாக்கம் பிராக் ஜோதி ஸ்டுடியோவில் நடைபெற்றது. நடுவில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மதுரைதண்டபாணி பிலிம்ஸோடு கூட்டுச் சேர்ந்து படத்தை முடிக்க வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரண்டு முதலாளிகள்! இரண்டு டைரக்டர்கள்! ஏகப்பட்ட செலவு! படம் வெளி வந்ததும் சுமாராக ஓடியது. இழப்பு ஏதுமில்லை! குறைந்த லாபமே கிடைத்தது.

இப்படத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல் எழுதவேண்டும் என்று நாங்கள் விரும்பி னோம். அவரை நேரில் கண்டு பேசி இதைப்பற்றி முடிவு செய்யப் புதுச்சேரி புறப்பட்டோம். புராணப்படம் என்றவுடன் பாவேந்தர் முதலில் மறுத்தார். "சினிமாத் துறைக்குப்போய் புராணப்படம் எழுதித்தான்சம்பாதிக்க வேண்டுமா?’ என்று கேட்டார். 'உங்கள் திறமை வெளிப்பட வேண்டும்’ என்று வற்புறுத்திக் கூட்டி வந் தோம். பாவேந்தருக்கு ரூ 3000/- கொடுக்கப்பட்டது. திரைப்பட எழுத்தாளருக்கு அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. சேலத்தில் படக்கம்பெனி இருக்கும் வரையில் பெரியார் வந்தாலும், பாவேந்தர் வந்தாலும் கம்பெனிக் கட்டிடத்திலேயே தங்குவர். படக்கம்பெனி சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகு கம்பெனிக்கு எதிரி லேயே ஒரு வீடெடுத்து அதில் குடும்பத்தோடு பாவேந் தர் குடியிருந்தார். வீட்டில் புலால் உணவு செய்தால் என்னை விருந்துக்கு அழைப்பார். சமையல்காரன் சேலத்தைச் சேர்ந்தவன்; நன்றாகச் சமைப்பான்.

படப்பிடிப்பின் போது டி. என். ராஜரத்தனம் குடித்து விட்டுவருவார். ஒரு நாள் அதிக போதையோடு வந்து படுத்துவிட்டார். அவரை எழுப்ப முடியவில்லை. படப் பிடிப்புத் தடைப்பட்டது. பத்துக்குடம் தண்ணீரைத்