பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:16|குயில் கூவிக்கொண்டிருக்கும் <1

அடிகளார், பாவாணர், ஜீவானந்தம், இராசமாணிக்க னார், ப. நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாவேந்தர் மாநாட்டுத் தலைவர். முதலமைச்சர் காம ராசர் தமிழை ஆட்சி மொழியாக்கச் சட்டசபையில் தீர் மானம் செய்தது. இம்மாநாட்டின் எதிரொலி, பாவேந் தர் தலைமையின் வெற்றி! -

மாநாடு முடிந்து இளமுருகு பொற்செல்வியின் வீட்டுக்கு உணவருந்தச் சென்றார் பாவேந்தர். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மது அருந்தக் கூடாது என்று மருத்துவர்கள் பாவேந்தருக்குக் கட்டளையிட்டிருந்த னர். குடித்தால் விரைவில் இறந்து விடுவீர்!’ என்று எச்சரிக்கையும் கொடுத்திருந்தனர். என்றாலும் அனு பவித்த சுகம் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?” "கொண்டா பிராந்தி பாட்டிலை' என்றார் பாவேந்தர். தயக்கத்தோடு அவர் இலைமுன்னால் மதுப்புட்டி வைக் கப்பட்டது. எதிரில் இருந்த மதுப்புட்டியைக் கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிட்டார்.

எங்கள் ரேட்டியார்:

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ரிஹர்சல்ஹாலில் பாவேந்தருக்குத் தனி அறை வழங்கப்பட்டிருந்தது. அவருடைய ஏவல் கேட்க ஒரு பணியாளும் அமர்த்தி யிருந்தார் டி. ஆர். எஸ். ஒரு நாள் காலை செல்லப்ப செட்டியார் அவரைப் பார்க்க வந்தார். பாவேந் தர் தம் வாழ்க்கையில் அதிகம் மதித்த நண்பர்களுள் அவரும் ஒருவர். பாவேந்தர் அப்போது தான் முகம் மழித்துக் கொண்டு எழுந்தார். ரெட்டியாருக்கும் முகம் மழிக்கச் சொல்லி நாவிதனுக்குக் கட்டளையிட்டு விட்டுக் கழிப்பறைக்குச் சென்றார். கழிப்பறையிலிருந்து அவர் திரும்பி வந்தபோது ரெட்டியாரை நாற்காலியில் உட் கார வைக்காமல் கீழே உட்கார வைத்து மழித்துக் கொண்டிருந்தான் நாவிதன். அக்காட்சியைப் பார்த்த