பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Þ. முருகுசுந்தரம்/I !

நான் கண்டு பழகிய மேதைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். அவரோடு எனக்கு எற்பட்ட உறவை எனக்கு வாய்த்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.

எனக்கும் அவருக்கும் 1938-39ஆம் ஆண்டுகளில் பழக் கம் முதன் முதலாக ஏற்பட்டது. அப்போது கவி காள மேகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. புகழ்பெற்ற தமிழறிஞரும். பொறிஞ ருமான திருவாளர் பா.வே. மாணிக்க நாயகரின் பங்க ளாவை வாடகைக்கு எடுத்து அதில் படக்கம்பனி வைத் திருந்தனர். பாவேந்தர் அங்குதான் தங்கியிருப்பது

வழக்கம்.

கவிகாளமேகத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் யாவற்றையும் பாவேந்தரே எழுதினார். நாதசுவரச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தனம் காளமேக மாக நடித்தார். காளமேகத்துக்காகப் பாவேந்தரால் எழுதப்பட்ட பாடல்கள் அடையாறு பிராக் ஜோதி ஸ்டுடியோவில் முதன் முதலாக அரங்கேற்றம் செய்யப் பட்டன. அந்நிகழ்ச்சிக்கு நீதிக் கட்சியின் முன்னாள் அமைச்சர் திரு எஸ்.இராமநாதன் தலைமை வகித்தார். இசைமேதை ஜி.என். பாலசுப்பிரமணியம், திரு. தியாக ராஜபாகவதர், இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி ஆகி யோர் பாடல் அரங்கேற்றத்தைக் காண வந்திருந்தனர். பாவேந்தர் லாங் கோட் அணிந்து அவருக்கே உரித் தான கம்பீரத்தோடு காட்சியளித்தார். திருவாளர் இராஜரத்தனம் பாடுவதற்காக எழுந்ததும் ஜி.என்.பி., பாகவதர், எம். எஸ், ஆகிய மூவரும் எழுந்து நின்று கொண்டனர். இராஜரத்தனத்தின் இசை ஞானத்துக்கு அப்படி ஒரு மரியாதை. அவர் பாட்டை விரும்பித் தொலை பேசியில் கேட்பவர் பலர்.

பாவேந்தரிடம் பேசிக்கொண்டிருப்பது சிறந்த பொழுது போக்கு; சிரிக்கச் சிரிக்கச் சுவைபடப் பேசுவார். இலக்கி யத்தில் யார் எந்த ஐயம் கேட்டாலும் உடனுக்குடன்