பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t” முருகுசுந்தரம்123

காரணத்தால் திட்டமிட்டிருந்தபடி அந்நாட்டிய நிகழ்ச்சி நடத்த முடியாமல் போய்விட்டது. பாவேந்தர் குடி யிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் நாட்டியக்குழு தங்கி யிருந்தது. சமையலுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பாவேந்தர் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி வேலைக்கிருந்தான். அவன் ஓர் அப்பாவி, எல்லாரும் அவனைக் கோட்டைக் கறையான்' என்று கூப்பிடுவார்கள். சமையலுக்காக ; படி மிளகாய் வாங்கி வரும்படி பாவேந்தர் அவனை அனுப்பியிருந்தார். அவன் தவறுதலாக :படி மிளகாய் வாங்கி வந்துவிட்டான். பாவேந்தருக்கு அளவு கடந்த கோபம்,

‘ஏண்டா இவ்வளவு மிளகா வாங்கி வந்தே? என்று கேட்டார் பாவேந்தர். அவன் ஏதோ அரைகுறையாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

டேய் நில்லுடா! எருமை! நா கேக்கற, நீ பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கறயே..கேலியா பண்ற...” என்று சொல்லிவிட்டு ஓங்கிக் கன்னத்தில் அறைந்தார். பல் ஒன்று அவன் வாயிலிருந்து தெறித்து விழுந்தது. ஏதோ கோபத்தில் அடித்துவிட்டாரே தவிர, பல்விழுந்ததைப் பார்த்ததும் அவருடைய கண்கள் கலங்கிவிட்டன.

பாவேந்தருடைய வாழ்க்கையில் நினைவு கூரத்தக்க நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு. அவரோடு பழகிய வர்கள் அவருடைய உணவுப் பழக்கங்களைப் பற்றி அடிக்கடி கூறுவதுண்டு. அவர் புலால் உணவை விரும் பிச் சாப்பிடும் இயல்புடையவர். நான் மரக்கறி உணவுண் பவன். என்றாலும் நாங்கள் சேர்ந்து உணவுண்ட சில நிகழ்ச்சிகள் என் உள்ளத்தை விட்டு நீங்காமல் இருக் கின்றன.

சென்னையில் இருக்கும்போது தம்புச் செட்டித் தெருவில் உள்ள ராமபவனில் இட்டிலியைக் கட்டி வாங்கிவந்து