பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£- முருகுசுந்தரம்/27

கோட்டை அழகிரி, குப்தா, ஐயா(பெரியார்) ஆகியோர் பேச்சில் எனக்கு ஈடுபாடு அதிகம். 1937 ஆம் ஆண்டு குப்தா தலைமையில் இந்தி எதிர்ப்புப் படையில் நான் சென்றேன்.

1946 ஆம் ஆண்டு தஞ்சைக்கு அருகில் உள்ள மாரியம் மன் கோவில் கூட்டத்துக்கு ஐயாவையும், பாவேந்தரை யும் அழைத்திருந்தேன். பாவேந்தரின் கம்பீரமான தோற்றமும், துணிச்சலான பேச்சும் இளைஞனாக இருந்த என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஐயாவைப் போலப் பாவேந்தரும் எஃகு உள்ளம் படைத்தவர்; நினைத்ததை அஞ்சாமல் கூறுபவர். ஐயா கூடச் சில சமயங்களில் வளைந்து கொடுப்பார்;ஆனால் பாவேந்தர் கொஞ்சங்கூட வளைந்து கொடுக்காத கொள்கை மறவர்.மாரியம்மன்கோவில் கூட்டத்தில் புராணங்களில் புதைந்து கிடக்கும் ஆபாசங்களையும், முடை நாற்றம் வீசும் மூடத்தனங்களையும் சூறைக் காற்றைப் போல் சுழன்றடித்துத் தாக்கினார். சிறுத்தொண்டர் புராணத் தைப்பற்றிக் குறிப்பிடும்போது, இதையெல்லாம் ஒரு கதைன்னு எழுதிட்டா... நாமும் வெட்கமில்லாம படிக்க றோம்...' என்று ஏகவசனத்தில் விளாசினார்.

கூழுக்கொருவனுக்கு உழைப்பில்லை என்றால் கோலை முறித்திடுவோம்

என்ற அவர் பாட்டு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள். பேராவூருணித் தோழர் கருப்பையா பாவேந்தர் பாடல்களை மெய்சிலிர்க்கப் பாடுவார்.

மாரியம்மன் கோவிலில் கூட்டம் நடந்த அன்றே தஞ்சை யில் ஒரு திருமணத்துக்குப் பாவேந்தர் தலைமைதாங்கி னார். மணமகள் ஒரு கைம்பெண்; கைக்குழந்தை ஒன்றும் அவருக்கு இருந்தது. அச்சீர்திருத்தத் திரு மணத்துக்குத் தலைமைதாங்கிச் சிறப்புற நடத்திக் கொடுத்தார் பாவேந்தர்.