பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

யான் இசை மாணாக்கனாக இருந்த காலம் அது. ஒரு நாள் பாவேந்தரிடமிருந்து ஓர் இனிய செய்தி வந்தது.

"கோவையில் நாளிது 1950 ஆம் யாண்டுமே"த் திங்கள் 27-28 ஆகிய நாட்களில் முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நிகழவிருப்பதால், நீவிர் இசையமுது பாடல்களைப் பாடுவதற்கு வந்து சேருக' என்று ஆணை பிறப்பித் திருந்தார்கள். காலத்தை எதிர்பார்த்துக் கொண்டி ருந்த யான் பண்ணமைத்தது போக எஞ்சியிருந்த மற்ற பாடல்களுக்கும் இசை உரு போட்டுக் கொண்டு மாநாட் டிற்குச் சென்றிருந்தேன்.

முத்தமிழ் மாநாடு பாவேந்தர் அவர்களின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப் பெற்றது. பாவேந்தர் அவர் களின் மாநாட்டுத்தலைமை உரையுடன் காலைநிகழ்ச்சி முடிவுற்றது. மாலையில் இசைத்தமிழ் நிகழ்ச்சி தொடங் கப்பட்டது.

பற்பல இசைஞர்கட்கு இடையிலே பாவேந்தருக்குப் பிடித்தமான பாடல்கள் பலவற்றை நான் பாடிக் கொண்டிருந்தேன். தலைவாரி பூச்சூடி" என்ற இசை யமுதுப் பாடலைப் பாடத் தொடங்க இருந்த என்னை நோக்கி, இதைத்தான் எல்லாரும் பாடுகின்றார் களே. நீ "காலுக்குப் புன்னையிலை போலும் என்ற பாடலைப் பாடேன்' என்று அரங்கினர் அறிய அறிவித் தார் பாவேந்தர்.

அதன்படி அப்பாடலைப்பாடி ஓய்ந்ததும் எனக்குப் பின் பாடவிருந்த பாடகர் கோவை திரு அருச்சுனன் என்ப வர் "இது என்ன இசை? யார் இதை இப்படி இசைப் படுத்தியது?” என்று ஓர் வினாவினை எழுப்பினார்.

நான் ஒலிபெருக்கி முன் நின்றவாறே இது பாகுஆசுவரியைச் சார்ந்த இசை: பாவலர் பெருமானுக்கு மிக