பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54|குயில் கூவிக்கொண்டிருக்கும் <3

வர். அப்போது 'விடிவெள்ளி’ என்ற படத்தை இயக் கும் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்தார். அப் போது அவரைத் தேடிப்பிடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. ஒருநாள் பாவேந்தர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பீம்சிங்கை வரும்படி சொன்னார்; அவரும் வந்தார். பாண்டியன் பரிசைக் கொடுத்து அதற்கு ட்ரீட்மெண்ட் எழுதிக் கொண்டு வரும்படி சொன்னார். பேச்சு வாக்கில் "ஆமா, நீ எத்தனாவது படிச்சிருக்கே?' என்று பீம்சிங்கைக் கேட்டார். நான் தமிழே படிக்கல. பூனாவிலே படிச்சேன்’ என்று பீம் சிங் சொன்னார். கொஞ்சநாளில் 'பாரதிதாசன் பிக் சர்ஸ்’ என்ற பெயரில் முதலமைச்சர் காமராசர் பாவேந் தரின் படக் கம்பெனியைத் துவக்கி வைத்தார். பாண்டி யன் பரிசுக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு இவ்வளவு தான். பிறகு சென்னை செல்லும்போது பாவேந்தரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவது வழக்கம்.

பாவேந்தரோடு பழகியவர்களுக்கு அவருடைய உணவுப் பழக்கங்கள் நன்றாக நினைவிருக்கும். அவர் சேலத் தில் தங்கியிருந்தபோது அடிக்கடி மீன் கேட்பார். செவ் வாய்ப் பேட்டைச் சந்தையிலும், பனைமரத்துப்பட்டி ஏரியிலிருந்தும் வரால் மீன் வாங்கிவந்து கொடுப்பேன். வரால் என்றால் அவருக்கு உயிர்; அதன் சுவைபற்றி விரிவாகப் பேசுவார். மீன் குழம்பை மூன்று நாள் சுண்டவைத்துச் சாப்பிடுவார். சேலம் நண்பர் ஒருவர் கரடி வற்றலும், புதுக்கோட்டை நண்பர் ஒருவர் புலி வற்றலும் கொண்டுவந்து கொடுப்பார்கள். அவற்றைச் சமையல்காரனிடம் எண்ணிக் கொடுத்து வறுக்கச் சொல்லுவார். கருவாடும் அவருக்குப் பிடிக்கும். பரி மாறப்பட்ட வாழை இலையின் பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு எங்களிடம் பேசியவண்ணம் சாப்பிடுவார். இப்படிச் சாப்பிட்டு வேறு யாரையும் நான் பார்த்த தில்லை.

சென்னை போகிஸ் ரோட்டில் இருந்த டைரக்டர் கோட்