பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Đ- முருகுசுந்தரம்/71

இசையமைப்பாளர் என்னிடம் வந்து அச்சொல்லை மாற்றிக் கொடுக்கும்படி கேட்டார். நான் குலுங்கிடும் பூக்களெல்லாம்’ என்று மாற்றிக் கொடுத்தேன். இதைக் கேள்விப்பட்டதும் பாவேந்தருக்கு என் மேல் கோபம். இந்த நிகழ்ச்சியின் எதிரொலியாகச் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ஏ.வி.எம்.மில் "பராசக்தி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பராசக்திக்குரிய பாடல்கள் ரெகார் டிங்' செய்து கொண்டிருந்தனர். பாவேந்தர் ரெகார் டிங் நடந்த இடத்தில் ஏதோ உரக்கப் பேசிக் கொண்டி ருந்தார். அவரைப் பேசாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்குப் பாவேந்தர் "ஏ... என்பேச்சும் ரெகார்ட் ஆயிடும்னுபயப்படறியா. ரெகார்டிங் மெஷின் என்னோட பாட்டில கமழ்ந்திடும் கற சொல்லை ரெகார்டு பண்ண முடியல... எம் பேச்சைத்தா ரெகார்டு பண்ணப் போவுதா... போப்பா...' என்று சலிப்போடு சொன்னார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் கல்யாணி' என்ற படத்துக்கு Wire Recording நடந்து கொண்டிருந்தது, இசையமு தில் உள்ள பாவேந்தரின் அதோ பாரடி' என்றுதொடங் கும் வண்டிக்காரன் பாட்டு ரெகார்டிங் ஆகிக் கொண் டிருந்தது. பதிவாகி முடிந்ததும் அப்பாட்டை ரெகார் டிங் அறைக்குள் வைக்கச் சொல்லி வெளியில் இருந்து கேட்டார் பாவேந்தர். அதன் இசையமைப்பு அவருக்குத் திருப்தி தரவில்லை. பாவேந்தர் அருகில் இருந்தவர் களைப்பார்த்து, ஏப்பா சங்கீதம் போட்றவ வண்டி யோட்டி இருக்கானா? தூரத்திலே இருந்து வண்டிக் கார பாட்டைக் கேட்டிருக்கணும்... ஊம்' என்று சலித் துக் கொண்டார்.

"அபூர்வ சிந்தாமணி’ என்ற படத்துக்குப் பாவேந்தர் வச னம் எழுதியிருந்தார். அப்படத்துக்கு வெளிப்புறக் காட்சிகளை எடுப்பதற்காக நடிகர் குழு ஏர்க்காடு மலை