பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> முருகுசுந்தரம்/73

சேர்க்கப்பட்டிருந்தார். தமிழ்மலை கட்டிலில் சாய்ந்து கிடந்தது. மூக்கின் வாயிலாகப் பிராணவாயு செலுத் தப்பட்டிருந்தது. கொஞ்சம் நினைவு வந்ததும் எழுந்து உட்கார்ந்தார். மாரடைப்பால் தாக்கப்பட்டவர் படுக் கையில் கூட அசையாமல் கிடக்க வேண்டும். ஆனால் பாவேந்தர் எழுந்து உட்கார்ந்தார். பாத்ரும் போக ணும் என்றார். அருகில் இருந்த அன்பர் ஒருவர் எழுந்திருக்காதீர்கள்? இங்கேயே போகலாம்!' என்று கூறித்தடுத்தார். பாவேந்தருக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. ஏ! நீயார் என்னைத் தடுக்க! மரியாதையைக் கெடுத்துக்காதே!’ என்று அந்த நிலையிலும் சத்தம் போட்டார். பாவேந்தர் பிறரை அதட்டியே பழக்கப் பட்டவர். அவரை யார் அதட்ட முடியும்? பிறகு அரு கில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து மெதுவாகப் பாத் ரூமுக்கு அழைத்துச் சென்றனர். அன்றே அவர் ஆவி பிரிந்தது. புதுவைக் குயிலின் குரல் ஒடுங்கியது.

பாவேந்தர் மாடர்ன்தியேட்டர்ஸ் ‘சுபத்ரா'வுக்கு வசனம் எழுதினார். போருக்குப் புறப்பட்ட காதலன் அருச்சு னனைச் சுபத்ரா வைத்தகண் வாங்காமல் பார்க்கிறாள். அருகில் இருந்த அவள் அரண்மனைத் தோழி அதை ஒர்நாள் நினைவு கூர்ந்து ‘சுபத்திரை? அன்று போருக் குச்சென்ற பார்த்தனை, நீ வைத்த கண் வாங்காமல் பார்த்தனை?’ என்று குறிப்பிடுகிறாள். இந்த வரி களைக் கேட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன. என்றா லும் இன்றும் அவ்வரிகள் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.