பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/89

சார்பில் கேட்பதற்கு டி. ஏ.வி. நாதன் வந்திருந்தார். தமிழ்நாடு பத்திரிகைக்கு புதுவை ஏஜெண்ட் பாவேந்த ரின் மகன் மன்னர் மன்னன். பத்திரிகைக்குச் சேர வேண்டிய தொகையை அனுப்பக் காலதாமதம் ஏற் பட்டதால் தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து ஒரு முறை வக்கீல் நோட்டீசு அனுபப்பட்டது. உடனே அத் தொகைக்கு "செக் போட்டு அனுப்பும்படி மன்னர் மன்னனிடம் கூறினார் பாவேந்தர். அந்நிகழ்ச்சி அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. எனவே மாணிக்கவாசகம் பார்க்க வந்தபோது அவரிடம் பேச வில்லை பாவேந்தர். டி. ஏ.வி. நாதன் இரண்டு மூன்று தடவை நடந்து மலருக்குக் கவிதை வாங்கிச் சென்றார். இரவு கவிதை எழுதிப் போட்டு விட்டுப் பாவேந்தர் தூங்கி விட்டார்.என் மனைவி ரகுபதி அதைப் பெயர்த்து எழுதி வைத்தாள்.

ஒரு முறை சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டுக்கு வந்தார் பாவேந்தர். நியாயமாக அவனுக்கு எட்டனா கொடுத் தால் போதும்; ரூ 2; கொடுக்கச் சொன்னார். எதற்கு அவ்வளவு தொகை என்று கேட்டேன். எவ்வளவு தூரம் தெரியுமா? மேலமாசி வீதியெல்லாம் சுத்திக்கிட்டு வந்தா...ம்...கொடுப்பா' என்றார். பேசாமல் கொடுத் தேன். மறுபடி ஒரு முறை அதே இடத்திலிருந்து வரும் போது ரிக்ஷாக்காரனுக்கு 6 அணா தான் கொடுத் தோம். பாவேந்தர் உலகியலைப் பொறுத்தவரையில் குழந்தை.

ஒரு முறை முருகுசெழியன் என்ற நண்பர் பாவேந் தரை விருந்துக்கு அழைத்திருந்தார். போகும்போது நானும் அவரும் பேசிக் கொண்டே நடந்து போனோம். வரும்போது பாதிவழியிலேயே நின்று விட்டார். 'இனி வண்டி நகராது. வண்டி கூப்பிடு?’ என்றார். கூப்பிட் டேன். மதுரை வந்தால் திரைப்படம் பார்க்கஅழைத்துச் செல்வேன். பாதியிலேயே எழுந்து வந்து விடுவார்.