பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் காதல் கதை 7 இங்ஙனம் குயிலின் கதையைக் கேட்கக் கேட்கக் கவிஞருக்கு இன்ப வெறி மூண்டெழுகின்றது. சின்னக் குயிலி யின்மீது காதல் கொள்ளுகின்றார். அவர் உள்ளத்திலும் உயிரிலும் அந்தப் பிள்ளைக்குயிலின் பேச்சு ஆழப் பதிந்து விடு கின்றது. காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல், சாதலோ சாதல்’ என்ற பல்லவி கவிஞரின் உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடத்தனையும் விள்ள ஒலிக்கின்றது. சித்தம் மயங்கித் திகைத்து நிற்கின்றார். இந்நிலையில் கானகத்தில் மறைந்து சென்ற எல்லாப் பறவைகளும் சோலைக் கிளைகளிலெல்லாம் சூழ்ந்து ஒலிக்கத் தொடங்கு கின்றன. நீலக்குயிலும் நெடிதுயிர்த்து மீண்டும் பேசத் தொடங்குகின்றது. மேற்குலத்தீர், காதல் பாதை கரடு முரடு என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நான் துன்பக் கடலில் தத்தளிக்கும் நிலையில் நீர் நாவாய் போல் வந்து நிற்கின்றீர். என் அல்லல்கள் எல்லாம் அறும்படி நூம்மோடு அளவளாவி யான் பெறும் இன்பத்திற்கும் இடையூறு மூண்டு விட்டதே. எங்கோ சென்று ஒழிந்த பறவைகள் யாவும். மீண்டும் திரும்பி வந்து விட்டனவே. அடுத்த நான்காம் நாள் இங்கு நீர் வந்தருளல் வேண்டும். இதனை நீர் மறக்கக் கூடாது. சோதித் திருவிழியீர், இப்போது என் சிந்தை பறி கொண்டு செல்லுகின்றீர். மீண்டும் நீர் வாரீராகில் ஆவி தரியேன். இந்த நான்கு நாட்களும் எனக்குப் பத்து யுகங்களாகக் கழியும். சென்று வருவீர்.” இவ்வாறு இந்தச் சிறுகுயில் தேறாப் பெருந்துயரம் கொண்டுக் கவிஞருக்கு விடை கொடுத்தனுப்புகின்றது.