பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4حسنة فكاهي காதலோ காதல் குயில் பாட்டு ஒர் அருமையான காதல் காவியம். இதனை எவரும் மறுத்தற்கில்லை. "இக்காலத்தில் எழுதப் பெறும் காதல் பாட்டுகள், அகத்துறை மரபுகளைப் பின் பற்றாது தற்காலப் பண்புகளுடன் இருக்க வேண்டியது அவசியம்' என்று கூறியவர் குயில் பாட்டு இங்ங்னம் அமைந்த ஒரு காதல்பாட்டு என்றும் கருதுகின்றார். இதனைத் தெளிவாகக் கூறாவிடினும் பாரதிபற்றிய இவர் மதிப் பீட்டில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம். இக்காலத் தில் எழும் காதல் இலக்கியங்களில்-புதினங்கள் உட்படகாதல்பற்றிய திணை, துறைகளில் பெயர்கள் இல்லா விடினும், அடிப்படையில் பண்டைய நெறி முறைகள் உயிரோட்டம்போல் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். காதல்பற்றிய பண்டைய நெறிமுறைகளை ஆழ்ந்து கற்ற வர்கள் இக்காலக் காதற் பாடல்களை ஊன்றிக் கற்குங்கால் அந்த நெறிமுறைகள் இலைமறை காய்கள்போல் அமைந் திருப்பதைக் கண்டு அநுபவிக்கலாம். பாரதியாரின் படைப்புகளில் மிகப் பெருமை வாய்ந்த "குயில் பாட்டில் குயில் ஈரிடங்களில், à:* அய்யர், ஏ. வி. தற்காலத் தமிழ்