பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2á குயில் பாட்டு:ஒரு மதிப்பீடு காதலை வேண்டித் கரைகின்றேன் இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று ஏங்குவதைக் காண்கின்றோம். காதல் போயிற் சாதல்’ என்று தத்துவத்தைப் பறை சாற்றும் குயில் பாட்டு உலகப் பேரிலக்கியங்களுடன் ஒன்றாக வைத்து எண்ணிப் போற்ற வேண்டிய ஒர் அற்புதப் படைப்பு. இப்பாட்டின் கலைத் திறனாகிய கவிதைத் திறனும் கற்பனை எழிலும் பிற கவிஞர்களிடம் காண்டல் அறியவையாகும். இந்தக் காதல் தத்துவத்தைப்பற்றிப் பாரதியார் தம் கவிதைகளில் பல இடங்களில் போற்றுகின்றார். கண்ணன் பாட்டில் கண்ணன்-என் காதலன்' 'கண்ணன்-என் காந்தன் 'கண்ணம்மா.என் காதலி' என்ற தலைப்புகளில் காணப் பெறும் பன்னிரண்டு கவிதைகளும் காதலைப் பற்றிப் பாடிய பாரதியாரின் அற்புதப் படைப்புகள். இவைகளை விரிவாக எடுத்து விளக்க ஈண்டு இடமில்லை," எனினும், எண்ணும் பொழுதிலெல்லாம்-அவன்கை இட்ட விடந்தனிலே தண்ணென் றிருந்ததடி!-புதிதோர் சாந்தி பிறந்த தடி" என்றும், சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கவை-முகச் சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ?" என்றும், 2. குயில் பாட்டு: குயிலின் காதற் கதை. அடி (13–14); {49–50) 3. வேண்டுவோர் கண்ணன்பாட்டுத்திறன் (சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-625001) என்ற நூலில் கண்டு தெளியலாம்) 4. கண்ணன்-என் காதலன்-(1)-7 5. கண்ணம்மா என் காதலி (31-1