பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 குயில் பாட்டு:ஒரு மதிப்பீடு குள்ளச்சாமியும் பாரதியாருக்கு மையிலகு விழியாளின் காதலொன்றே வையகத்தில் வாழும் நெறி' என்று காட்டு வதையும் காண்கிறோம்." இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம் இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ?' என்று காவியங்களும் வேறுபல இலக்கியங்களும் காதல் பற்றியவையாக இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றார். இன்னும், மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால் மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே" என்று கேட்கின்றார்.காதலைத் தவறாகக் கருதும் சில மூடர் களையும் சுட்டிக் காட்டாமல் இல்லை. நாடகத்தில் காவியத்தில் காத லென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்: பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே." என்ற கவிதைப் பகுதியில் இதனைக் கண்டு மகிழலாம். அகத்திணை நெறி முறைகளை நன்கு அறிந்து தெளிந் தவர் பாரதியார். இந்த மரபுகளைத் தம் படைப்புகளில் பெயரிட்டுக் காட்டாவிடினும் இவை இவற்றில் அமைந் و2-وه-وه .9 10. டிெ-ஷ்ெ-51 11. டிெ-டிெ-45 12. ു-ബേച്ഛ- 52