பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலோ காதல் 27 திருப்பதைக் காணலாம். பண்டைய ஆசிரியர்கள் காதல் நெறியைக் களவென்றும் கற்பென்றும் இரு வகையாக நெறிப்படுத்திக் காட்டியுள்ளனர். காதலனும் காதலியும் தாம் ஒருவருக் கொருவர் முன்பின் அறியாதவர்களாக இருப் பினும் தொல்காப்பியர் கூறும் பாலதாணையால்’’’ ஓரி டத்தில் சந்தித்துக் காதல் கொள்ளுகின்றனர்; கலந்து இன்பந் துய்க்கின்றனர். இதனைக் களவு என்று அகப் பொருள் இலக்கணம் கூறும். இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள் பிறகு பல்லோரறிய மணந்து கொள்வர். இதனைக் கற்பு’ என்று பெயரிட்டு வழங்குவர். முதலில் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு அப்பால் திருமணம் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையாகிய கற்பொழுககத்தை மேற் கொள்வது களவின்வழி வந்த கற்பு’ என்று சொல்லப் பெறும். களவு ஒழுக்கமே நிகழாமல் முதலிலேயே திருமணம் புரிந்து கொண்டு கணவன் மனைவியாக வாழும் நிலையும் அக் காலத்தில் இருந்தது. இதனைக் களவின் வழி வாராக் கற்பு’ என்று வழங்குவர். சாத்திரம் பேசுகிறாய்,-கண்ணம்மா! சாத்திரம் ஏதுக்கடி! ஆத்திரம் கொண்டவர்க்கே,-கண்ணம்மா! சாத்திர முண்டோடி! மூத்தவர் சம்மதியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்; காத்திரு பேனாடி?-இதுபார், கன்னத்து முத்தமொன்று!" என்ற பாடற் பகுதியில் இந்த இரு நெறிமுறைகளையும் பாரதியார் குறிப்பிடுவதைக் காணலாம். வதுவை' என்பது 13. தொல். பொருள். களவு-2. 14. கண்ணம்மா-என் காதலி -(1)-3