பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

વ્યક્ર, ബ് 34 குயில் பாட்டு: ஒரு மதிப்பீடு என்ற நூற்பாவில் ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடு வதைக் காண்க. வள்ளுவப் பெருந்தகையும், காமம் விடுவொன்றோ நாண்விடு நெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு.” என்று விளக்குவர் தலைமகள் தன் நெஞ்சை நோக்கி ஒன்று காம வேட்கையை விடு; அதனை விடமாட்டா யாயின், நாணினை விடு' என்று கூறுவதைக் காண்க. கலித்தொகைத் தலைவியின் செயலும் இம்மரபினை பொட்டியதாகவே உள்ளது. தலைவன் ஒருவன் யானை முதலியவற்றின் அடியைத் தேடுபவன் போல தலைவி ஒருத்தி யைச் சுற்றிச் சுற்றி வருகின்றான்; தனக்குற்ற காதல் நோயைக் குறிப்பால்தான் புலப்படுத்துகின்றான்; இப்படிப் பல நாட்கள் செல்லுகின்றன. பல நாட்கள் இதனைக் கண்ட தலைவியும் அவனிடத்து உறவில்லாவிடினும் வருத் தத்தில் அழுந்துகின்றாள். என்றாலும், தலைவன் தன் குறையைச் சொல்லுவதில்லை. தலைவியும் தலைவனின் நிலைக்குத் தான் வருந்துவதாகக் கூறுவது பெண் தன்மை யன்று என்று கருதுகின்றாள். ஆனால் இப்படி நாட்களைக் கடத்திக் கொண்டே சென்றால் தலைவன் இறந்து படக் கூடுமென்று கருதி இடையில் ஒரு நாள் தலைவி தான் உற்ற வருத்தத்தால் துணிந்து நாணமில்லாத ஒரு செயலை மேற்கொள்ளுகின்றாள். ஒரு நாள் தினைப் புனத்திற்கு அருகிலுள்ள ஒர் ஊசலில் ஆடுகின்றாள். அப்பொழுது அங்கு வந்த தலைவனை ஊசலை ஆட்டுமாறு வேண்டுகின்றாள். அவனும் ஒப்புக் கொண்டு அவ்வாறே ஆட்டுகின்றான். தலைவி அவன் மார்பில் பொய்யாகக் கைநெகிழ்ந்து விழு கின்றாள். அவனும் அதனை உண்மை என்றே நம்பி அவளை 27. குறள்-1247 (நெஞ்சொடுகிளத்தல்-7)