பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (பேராசிரியர் - டாக்டர், இரா. கு. நாகு) இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராகக் கொள்ளத் தக்கவர் மகாகவி பாரதியார். அன்னார் தம் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாவித்திட விழைந் தார். அந்த மகாகவி நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றை யும், மானுடத்தையும், மனிதாபிமானத்தையும் அகிலத்து வத்தையும் தம்முடைய பாடல்களுக்கு உள்ளடக்கமாக்கிக் கொண்டு தமிழுக்கு உலகப் பார்வையையே வழங்கினார். அவர் பிறந்ததால் தமிழுக்கு ஏற்றம் உண்டாகியது. நவநவ மான சோதிமிக்க கவிதைகளைத் தமிழுக்குத் தந்து தமிழை வளப்படுத்தினார். அம் மகாகவியின் எழுத்துக்கள் எல்லாமே சிறந்தவைதாம்; என்றாலும், குறிப்பிட்டுக் கூறத்தக்கவை மூன்று உண்டு; மகாபாரதத்தில் பாரதத்தை நினைப்பூட்டிய பாஞ்சாலி சபதம் ஒன்று, கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையோர் எண்ணித் துதிக்கும் பண்ணார்ந்த கண்ணன் பாட்டு மற்றொன்று; முன்னிக்கவிதை வெறிமூண்டு மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றிய கற்பனைத் திறத்தினால் பிறப்பெடுத்த குயில் பாட்டு பின்னும் ஒன்று. இந்த மூன்றனுள்ளும் குயில்பாட்டிற்கு ஒரு தனி இடம் உண்டு அதன் அழகில் ஈடுபடாத தமிழறிஞர்களே இல்லை எனலாம். 'குயில் பாட்டிலே - காதல், கொப்புளிக்கு தடா, செயல்