பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

库粤 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு இதனால்தான் கவிஞர் கடல் தன் வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி' என்று இந்தக் குயில்பாட்டின் தொடக்கத்தில் பாடினார் என்று கருதலாம். குயிற்பாட்டில் குயில் தன் காதற் கதையைக் கூறும் போது, அறிவும் வடிவுக் குறுகி, அவனியிலே சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும் தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ யாவர் மொழியும் எளிதுணரும் பேறுபெற்றேன்; மானுடவர்நெஞ்சவழக்கெல்லாம்தேர்ந்திட்டேன்.”* என்று தனக்கேற்பட்ட நற்பேற்றினைக் காட்டித் தான் நல்லோசைகளில் தன் மனத்தைப் பறி கொடுத்ததைச் செப்புகின்றது. கானப் பறவை கலகலெனும் ஒசையிலும் காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும் ஆற்றுநீரோசை அருவி யொலியினிலும் நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும் ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் - ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் அட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்தடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் வேயின் குழலோடு வீணைமுத லாமனிதர் வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி 11. கு. பாகுயிலின் காதற்கதை-அடி (23-27)