பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இசைக் கவர்ச்சி 57 (திருவாய் 10. 7: 5) என்பன போன்ற சொற்றொடர்கள் இதற்கு அரணாக அமையும். சடகோபன் சொல், சந்தங்கள் ஆயிரத்தையும் இசையுடன் சேவிக்க வேண்டும். இறைவனுடன் இரண்டறக் கலக்கவும், முத்திக்கு வழியாக அமையவும் துணைபுரிவது இசையாகும். கண்ணனின் (பரமான்மா)வேய்ங்குழலோசை ஆயமங்கையர்களின் (சீவான் மாக்கள்) மனத்தைக் கவர்வதைப் பக்தி இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. பாண்பெருமாளின் யாழின் இசையும் ஆனா யரின் குழலோசையும் அந்த அருட் செல்வர்களுக்கு முக்திக்கு வழியமைத்ததை மேலே குறிப்பிட்டோம். தும்புருவும் நாரதரும் வீணையினாலே இறைவனைப் பரவும் முனி புங்கவர்கன் என்பதை அறிவோம். வீணையில் வல்லவனான இராவணன் வீணையையே தன் தேர்க் கொடியாகக் கொண் டான் என்பதை நாம் அறிவோம். அருணகிரியாரின் இசைத் தமிழாம் திருப்புகழ் அவருக்கு முத்தியை நல்கியது. தியாகரா சரின் இசைப் பாடல்களே அவருக்கு வீடுபேற்றை அளித்த தாக நாம் அறிகின்றோம். இந்த மரபை எல்லாம் பாரதியார் நன்கு அறிந்து தெளிந்தவர். தானும் இசைக் கலையில் வல்லவர். ‘பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும்' என்ற பேரார்வம் கொண்டவர். இதனால்தான் விநாயகப் பெரு மானை , போற்றி! கலி யாணி புதல்வனே! பாட்டினிலே ஆற்ற லருளி அடியேனைத் தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள் வீணையொலி என்நாவில் விண்டு." என்று வேண்டினர் போலும்! ஒரிடத்தில் காற்றுத்தேவன் செயல்களை, 15. தோ. பா: காணி நிலம்-3 16. டிெ. வி. நா. மா. 29