பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு டைய மிகுபுகழையும் நற்பெயரையும் வீரப்பெண்மையை வழிபாடு செய்ததால் அடைந்தமையையும் அறிந்து தெளிந்த வர் பாரதியார்.பொதுவாகப் இவர் சேர மகளிரிடம் அழகு, நற் குணம், வீரம் இவை அற்புதமாக ஒருங்கிணைந்திருப்பதைக் காண்கின்றார். குயிலி சேர இளவரசனை மணக்கின்றாள்: இந்த இருவர் திருமணம் ஈறில்லாத காலம் வரை ஆன்மாவும் பரமான்மாவும் இணைந்த நிலையை நாம் ஏற்றுக் கொள்வ தாக அமைகின்றது. {4} உபநிடதத்திலுள்ள ஒரு குறிப்பும் குயிற்பாட்டோடு இணைத்து நம்மைக் காண வைக்கின்றது. ஒரே வண்ண முள்ள இரண்டு பறவைகள் ஒரு மரக்கிளையின்மீது அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலையை உபநிடதம் காட்டுகின்றது. அவற்றுள் ஒரு பறவை அந்த மரத்திலுள்ள கனியைத் தின்று தன்னை மறந்து விடுகின்றது; மற்றொன்று பொறுமையாக அப்பறவை உண்பதைக் கண்டு களிக்கின்றது. பழத்தை துகரும் பறவை நம்முடைய ஆன்மாவையும், அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பறவையோ இறைவனையும் உய நிடதம் குறிப்பிடுவதாகத் தத்துவ அறிஞர்கள் எடுத்துக்காட் டுவர். பழத்தை நுகரும் பறவை இறைவனைக் காணத் தொடங்கியதும், அது உலக இன்ப நுகர்ச்சி முழுவதையும் துறந்து, பரமான்மாவுடன் என்றும் இணைபிரியா நிலையை நாடுகின்றது. குயில் பாட்டில் மாடும் குரங்கும் நிலையற்ற உலக இன்பங்களைக் குறிக்கின்றன. ஆனால் அது ஞான வாளால் அவற்றை அழித்தொழிக்கக் காரணமாகின்றது. பின்னர் அதுபுலனுணர்வுகளின்அடிமைத்தளைகளினின்றும்விடு விடுக்கப் பெற்று அந்தமில் இன்பத்தை நல்கும் வீடு பேற்றை அடைகின்றது. கவிஞர் குயிலை நாடித்திரிவது அடைய முடி யாதவற்றை-அறியமுடியாதவற்றை- நோக்கிமேற்கொண்ட நெடும் பயணத்தைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இந்த நெடும் பயணம் பாரதியாரின் அசத்துள்ளேயே நடைபெறும்