பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு உள்ளடக்கம்: "குயில் பாட்டு எல்லா வகையிலும் தனிப் பட்டு நிற்கும் ஓர் அற்புதக் கதைக் காவியம் இவருடைய நீண்டதொரு தனிப் பாட்டு இதுவே யாகும். இவருடைய சக்திக் கோட்பாட்டிற்குள் அடக்க முடியாத தனிக் காவியம் இது. இதில் பாரதியாரின் கற்பனையாற்றல் சிறகடித்துக் கொண்டு பறப்பதைக் காண்கின்றோம். இந்தக் குயிலின் அற்புதக் காதற் கதை, முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியில்..." கண்டதோர் மோகனக் கனவாகும். இந்தக் கனவின் விளைவே 'குயில்பாட்டு என்ற அற்புதப் படைப்பு. எத்துணை இடையூறுகள் நேரிடினும் உண்மைக் காதல் அவற்றை யெல்லாம் தொலைத்து வெற்றி பெறும் என்பதே கனவில் எழுந்த இந்தக் காதற் கதை நமக்குத் தரும் செய்தி யாகும். காதல் வழிதான் கரடு முரடாம் என்பர்’ என்று கவிஞர் கூறும் கருத்து உண்மையான காதல் சுவடு எப் போதும் நேரியதாகச் செல்வதில்லை" (The course of true 1. கு. பா. குயில்-அடி 22-24