பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போருக்குள் ஒரு போர்

11


திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே!

விடுதலை–


ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை சாதியில்
இழிவுகொண்ட மனிதர்என்ப
திந்தியாவில் இல்லையே
வாழிகல்வி செல்வம்எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர்யாரும் ஒருநிகர்ச
மானமாக வாழ்வமே!

விடுதலை–


மாதர்தம்மை இழிவுசெய்பும்
மடமையைக் கொளுத்துவோம்
வையவாழ்வு தன்னில்எந்த
வகையினும் நமக்குளே
தாதர்என்ற நிலைமைமாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக
வாழ்வம் இந்தநாட்டிலே!

விடுதலை–

இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை பாடிப் பாருங்கள்.