பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குருகுலப் போராட்டம்

இதைத்தான் குருகுல முறை என்று குறிப்பிடுவார்கள்.

துரோணர் ஏகலைவன் கட்டை விரலைக் கேட்ட கதை ஆசிரியர்கள் எவ்வளவு வஞ்சகமாகச் செயல் பட்டார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சி இந்தியாவில் நிலைத்த பிறகு தான் கல்வி நிலையில் மாறுதல் ஏற்பட்டது.

ஆங்கில நாட்டிலிருந்து அரசாங்கப் பொறுப்புகளை ஏற்க வந்த அதிகாரிகள், பெரும் இடர்ப்பாட்டுக்குள்ளானார்கள். நாட்டு மக்களிடம் தொடர்பு கொள்வது இடர்ப்பாடாயிருந்தது.

ஓர் ஊருக்கு அதிகாரியாக வந்தவன் அந்த ஊர் மக்கள் பேசும் மொழியை அறிந்து கொள்ள வேண்டியவனாக இருந்தான்; அல்லது துபாஷ் என்று சொல்லப்பட்ட மொழிபெயர்ப்பாளர் உதவி தேவைப்பட்டது.

ஏதாவது ஒரு காரியத்தை முன்னிட்டு அவனை வேறு ஒரு பகுதிக்கு மாற்றுவதாயிருந்தால், அவன் ஏற்கனவே கற்ற மொழி பயனற்றதாய் இருந்தது. மீண்டும் அவன் வேறொரு மொழியைக் கற்றுக் கொண்டால்தான், அவன் சிறப்பாகப் பணிபுரிய முடிந்தது.

பல மொழிகள் கொண்ட இந்த நாட்டில், அதிகாரிகளாக வந்தவர்கள் இவ்வாறு இடர்ப்பட்டதை யெல்லாம் எண்ணி, இந்திய நாட்டின்