பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்தா முனிவரும்
ஈரோட்டண்ணலும்

காந்தியடிகள் வழக்கறிஞர் தொழிலுக்காக தென்னாப்பிரிக்கா சென்றார் என்பது யாவருக்கும் தெரியும்.

அங்கு வெள்ளையர்கள் கருப்பு இனத்தவரை எவ்வளவு கேவலமாக நடத்தி வந்தார்கள் என்பதற்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறே தக்க சான்றாகும்.

ஒரு வெள்ளையன் அறைந்த அறையில் காந்தியடிகளின் பல் உதிர்ந்து விழுந்த தென்றும் அன்று முதல் அவர் பொக்கை வாயராகி விட்டார் என்பதும், அந்தப் பொக்கை வாய்ப் புன்சிரிப்பே மனங்கவரும் தோற்றத்தைக் காந்தியடிகளுக்கு அளித்தது என்பதும் நாம் அறிந்ததே!

காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாய் நாட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான், தான் அதுவரை கவனிக்காத ஒன்றைக் கவனித்தார்.

வெள்ளையர்கள் கருப்பர்களிடம் காட்டும் அந்தக் கொடுமையான போக்கை இந்தியர்கள்