பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்

31

கட்டுரைகள் வரைவார். இருந்தாலும் ஆசாரங்களைக் கைவிடாமல் ஒரு ரிஷி போல வாழ்ந்து வந்தார். அதனால் அவரோடு நெருங்கிப் பழகிய வர்கள் மகரிஷி வ.வே.சு. ஐயர் என்று பெருமையாகக் குறிப்பிடுவார்கள்.

ஐயர் சொற்பொழிவாற்றும் போது தாம் ஒரு குருகுலம் அமைக்க விரும்புவதாகக் குறிப்பிடுவார். இதற்கு எல்லாரும் உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.

ஐயர் ஒரு முறை கல்லிடைக் குறிச்சிக்குப் போயிருந்தார். அங்கே யிருந்த ஆசிரியர்கள் ஐயரைச் சந்தித்தார்கள்.

அவர்கள் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள். அதனால் கல்லிடைக்குறிச்சி தாலுக்கா போர்டு பள்ளியிலிருந்து வேலையை விட்டு விலகி விட்டார்கள்.

விலகிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறு பள்ளிக்கூடம் தொடங்கினார்கள்.

அதற்கு “திலகர் வித்தியாலயம்” என்று பெயரிட்டார்கள். அய்யர் கல்லிடைக் குறிச்சி சென்ற போது, குருகுலம் நடத்த வேண்டும் என்ற அவருடைய ஆசையை அறிந்த ஆசிரியர்கள், தங்களால் தொடர்ந்து நடத்த முடியாத “திலகர் வித்தியாலயத்தை” ஐயரை எடுத்து நடத்துமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள்.