பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

குருகுலப் போராட்டம்

பெரிய அளவில் திட்டம் போட்டிருந்த ஐயர், அவர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, இது தொடக்கமாக இருக்கட்டுமே என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார்.

திலகர் வித்தியாலயத்து மாணவர்கள், தினந்தோறும் காலையில் தெருவில் பாட்டுப் பாடிக் கொண்டு வீடு வீடாகச் சென்று அரிசி வாங்கி வருவார்கள். சில இடங்களில் காய்கறியும் கிடைக்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சோறுகிடைத்து விடும். வசதியுள்ள மாணவர்கள் கொடுக்கும் பள்ளிக் கூடச் சம்பளம் ஆசிரியர்களின் சம்பளத்துக்குப் பயன்படும்.

அக்காலத்தில் பல ஊர்களில், பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் நடந்தன.

படிக்க வரும் பிள்ளைகள் அவரவர் வீட்டிலிந்து ஒவ்வொரு பிடி அரிசி கொண்டு வந்து ஆசிரியருக்குக் கொடுப்பார்கள்.

அவற்றைப் பிடி அரிசிப் பள்ளிக்கூடம் என்று சொல்லுவார்கள்.

திலகர் வித்தியாலயத்தை நடத்திக் கொண்டே ஐயர், பல ஊர்களில் குருகுலம் கட்டுவதற்குப் பெரிய இடம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

திருநெல்வேலியை அடுத்த சேரமாதேவியில் ஒருவர் தமது முப்பது ஏக்கர் நிலத்தை விற்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஐயர் அந்த