பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

குருகுலப் போராட்டம்

அவன் மூலம் குருகுலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிந்து கொண்டார்.

குருகுலத்தின் தினசரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டார்.

அவருடைய கேள்விகளுக்கு மகன் அளித்த பதில் மூலம் அவர் தெரிந்து கொண்ட செய்திகள் பல.

காலையில் 4 மணிக்கு எழுப்பி விடுவார்கள். கை கால் முகம் கழுவி பல் விளக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உடற் பயிற்சி நடக்கும்.

உடற் பயிற்சி முடிந்ததும் மலங்கழிக்கச் செல்ல வேண்டும். செல்லும் போது மண் வெட்டியுடன் போய் ஒரு குழி வெட்டி, அதில் மலங்கழித்த பின் மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும்.

குளித்து முடித்த பின் காலை 7-30மணிக்கு ஒரு பெரிய கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும், கூட வேண்டும். பார்ப்பன மாணவர்கள் ஒரு பக்கத்திலும், மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கத்திலும் நிற்பார்கள். தெய்வ வழிபாடு நடக்கும். ஐயர் பல பெரியோர்களின் வரலாறுகளைக் கூறுவார். புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒருமணி நேரம் கழிந்தபின் மாணவர்களுக்கு காலை உணவாக கஞ்சி வழங்கப்படும்.

உழவு வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை ஆகியவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பிரித்துவிடப்படுவார்கள். நெல் பயிரிடப்பட்-