பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

49

பரிமாறும் முறையை வைத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு முதல் சமபந்தி உணவு தான் அமுலில் இருக்கும் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டு, அடுத்த ஆண்டிலிருந்து சாதி வேற்றுமை பாராமல் நிறுவனத்தை நடத்த ஐயர் முன் வரவேண்டும். தமிழ் மக்களும் எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

வ.வே.சு. அய்யர் இந்த நடுநிலையான கருத்துக்கு ஒத்துப் போவதற்குப் பதிலாக, திரு.வி.க. சாதித் துவேஷ சக்திகளின் கைப்பாவை ஆகிவிட்டார் என்று கூறிவிட்டார்.

சாதிவேற்றுமை காட்டக்கூடாது என்று சொல்வது - பார்ப்பனர்களின் பார்வையில் சாதித் துவேஷம்!

ஒரே நிறுவனத்தில் உள்ள சிறுவர்களிடையே, பாகுபாட்டைப் புகுத்தக் கூடாது என்று சொல்வது சாதித் துவேஷம்!

இந்தச் சாதித் துவேஷம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு - பார்ப்பனர்களுக்குப் பிடிக்காத தலைவர்கள் தொண்டர்களுக்கெல்லாம் அவர்கள் துவேஷ முத்திரை குத்தினார்கள்.

மிக வசதியாக வாழ்ந்த தமிழர்கள் சிலரும் அவர்களுக்குப் பக்கவாத்தியமானார்கள்.

காங்கிரஸ் செயற்குழு திருச்சியில் 1925 ஏப்ரல் 27ம் நாள் மீண்டும் கூடியது.