பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

குருகுலப் போராட்டம்

தைத் தொடங்கினார். முழுமூச்சாக உழைத்து அரிசனங்கள் முன்னேற வழிகாட்டியாய் விளங்கினார்.

பிற்காலத்தில் அரிசன நலன்களுக்கு எதிராக காந்தி செயல்படுகிறார் என்று அரிசனங்களாலேயே நிந்திக்கப்படுகிறார்.

நன்றி பாராட்ட வேண்டியவர்கள் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதேன்? நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் அடிமைப் படுத்தப்பட்டு - பரம்பரை பரம்பரையாக விலங்குகளினும் கீழாக நடத்தப்பட்டு வந்த பஞ்சமர்கள் முதலானோர் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் கண்டு மனம் நொந்து அவர் தீண்டாமை யொழிப்பு முதலிய இயக்கங்களைத் தொடங்கினார் என்பது மறுக்க முடியாது.

ஆனால், மேலும் அவர்கள் முன்னேறுவதற்காக டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் புரட்சிகரமாகத் தொடங்கிய போராட்டங்களுக்கு அவர் பெரும் முட்டுக்கட்டையாக நின்றார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதற்கெல்லாம் காரணம் என்ன? காந்தியிடம் காணப்பட்ட உறுதியில்லாத் தன்மையேயாகும்.