பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம்புரண்டார்

71

சமபந்தி உணவுபற்றி காந்தி தமது கருத்து விளக்கம் என்ற முறையில் 1925 ஏப்ரல் 15 ஆம் நாள், தாம் நடத்திய “யங் இந்தியா” வாரப் பத்திரிகையில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குழப்பிக் குழப்பி அவர் எழுதிய விளக்கம் இது தான்:

“ஒரு உணவு விடுதியில் வசிப்பவர்களில் பல ஜாதிச் சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரே அறையில் சமபந்தியாகச் சாப்பிடச் செய்ய வேண்டுமா” என்று என்று ஒரு அன்பர் கேட்கிறார். கேள்வி சரியாகக் கேட்கப்படவில்லை. ஆனால், கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்குப் பதில், அந்தக் குழந்தைகளைச் சமபந்தியில் உணவருந்தச் செய்யலாகாது என்பதேயாகும்.

“ஆனால், கேள்வி கேட்பவர், அந்த உணவு விடுதியில் சேருபவர்கள் சமபந்தியில் சாப்பிட்டாக வேண்டும் என்று விதி செய்ய விடுதிக்காரருக்கு உரிமை இல்லை என்று வாதிப்பாரானால், அது சமபந்தி பற்றிய நிபந்தனையின்றிச் சேர்க்கப்பட்ட சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் பிற ஜாதியாருடன் உணவருந்தச் செய்வதாகும். ஆகையால் விதி ஏதும் முன்கூட்டியே அறிவிக்கப்படாத சந்தர்ப்பத்தில், வழக்கமான தனிப்பந்தி முறைகளே சரியாகும்.

“இந்தச் சமபந்திப் பிரச்சினை தொல்லை பிடித்தது. இதுபற்றிக் கண்டிப்பான விதிகள் ஏதும் செய்ய முடியாது என்பது என் கருத்து. இது அவசிய-