பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

குருகுலப் போராட்டம்

களா? அவன் தாங்கள் இருக்கும் அக்கிரகார வீதியிலேயே நுழையக் கூடாது என்றல்லவா ஒதுக்கி வைத்தார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிரவிடனைத் தோள் மேல் கையோட்டு அக்கிரகாரத்துக்குள் அழைத்து வந்த பாரதியைச் சாதியிலிருந்து விலக்கி வைத்த அக்கிரகார வாசிகள் எப்படி உயர்வு கொடுப்பார்கள் என்று காந்தியடிகளால் கருத முடிந்தது.

கீழான ஒருவருணத்தைச் சேர்ந்தவன், மேலான வருணத்தைச் சேர்ந்தவனுக்கு என்று வைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்ததற்காக, அடிக்கப்பட்டான் என்றால், இந்த வருணாசிரமத்தை வைத்துக் கொண்டு எப்படி சமுதாய நலத்தைக் காப்பதென்று காந்தியடிகள் சிறிதாவது சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பாரா?

தென்னாப்பிரிக்காவிலிருந்து முழுக்க முழுக்கச் சமுதாய நல உணர்வோடு இந்தியாவுக்கு வந்த காந்தியடிகள், மக்களெல்லாராலும் தங்கள் வழி காட்டி என்று போற்றிப் புகழ்ந்து பாராட்டப்பட்ட காந்தியடிகள் எப்படி இந்த வலையில் சிக்கிக் கொண்டார்.

காந்தியடிகளிடம் தொண்டராயிருந்து பயிற்சி பெற்ற ஈரோட்டு இராமசாமி நாயக்கர், தெளிவான சிந்தனையாளராக விளங்கினார். அதனால் தான் அவர் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால்