பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூக நீதியே
சமநீதி

குருகுலப் போராட்டத்திலிருந்து பெரியார் ஒரு பாடம் கற்றுக் கொண்டார்.

ஆசார சீலர்களாயுள்ள பார்ப்பனர்களிலிருந்து ஆசாரங் கெட்ட பார்ப்பனர்கள் வரை எல்லோருமே தருமம் நியாயம் என்பதை எப்போதும் அனுசரிப்பதில்லை.

தருமம் நியாயம் என்பதெல்லாம் அவர்கள் சாதியுயர்வைப் பாதிக்காத வரையில் தான் செல்லுபடி யாகும். தருமம் நியாயங்கள் எல்லாம் சாதி அடிப்படையில் கை வைக்கத் தொடங்குமானால் அவர்கள் அவற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிடத் தயங்க மாட்டார்கள்.

காந்தி பக்தர்கள் என்றும், காந்தியவாதிகள் என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள், காந்தி கொள்கைகளான சத்தியம் அஹிம்சை சமாதானம் சமத்துவம் என்பவற்றை யெல்லாம்