பக்கம்:குறட்செல்வம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸99

துணை செய்ய முடியும் என்று அவர் கருதினார். அந்த நம்பிக்கையில் தோன்றியதே திருக்குறள். -

வாழ்க்கையின் தொடக்க நிலை அன்பு. முழுநிலை அருள். இத்தகு அருள் உணர்வு துன்பத்தைக் கண்டால் துடிக்கும். துன்புறுத்தலுக்கு நாடு, இனி மொழி வேறுபாடு ஏது? யார் துன்புற்றாலும், எவ்வுயிர் துன்புற்றாலும், இதயம்கலந்த அருள் உணர்வோடு துன்பம் துடைப் பவனே மனிதன். -

அதனாலன்றோ. வாடிய பயிரிலிருந்து, வாட்டமுறும் மக்கள்வரை, வாட்டம் நீக்கி வளம் சேர்க்கும் வான்மழை அருளாயிற்று! பற்றுக் கோடின்றி பாரில் உள்ள உயிர் அனைத்தும் துய்த்து வாழ்ந்து துநெறிசேரத் துணை நிற்கும் இறைவனின் கருணை அருளாயிற்று.

பொருட் செல்வம் தேடி அலையும் மனித உலகம் உடின் கருணையையும் நோக்கி அலையுமானால், பெரும் பயன்பெறும்; அமைதி நிலவும்; வந்த காரியமும் நிறைவுறும். - -

ஈர நெஞ்சினர் இறைவனைக் காண்பார் என்றார் அப்பரடிகள். உமிழ்நீரால் தொண்டையை நனைத்து உலா வருதல் போல, பருகும் நீரால் வயிற்றை ஈரப்படுத்து வதுபோல, காய்ச்சற் பாட்டில் திகழும் இவ்வுடலை நீரில் அமிழ்த்தி நனைப்பதுபோல, நெஞ்சத்தையும் இனிய

அருளில் நனைக்க முயற்சிப்போமாக!

i--

劃 سی 口。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/101&oldid=1276405" இலிருந்து மீள்விக்கப்பட்டது