பக்கம்:குறட்செல்வம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

குடும்பம் ஏது? அதனால், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் கூறலாம்.

அடுத்து அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று கூறுகிறார் 'அவ்வுலகம்’ என்பதை வீடு என்று பொருள் கொள்வது மரபு. அங்ங்ணம் பொருள் கொள்வதில் தவறில்லை. ஆயினும், இந்த அவ்வுலகம் என்பது கேள்விக்குறி! அஃது அறிவொடு படாதது. அதனால் ஆய்வு இருக்கவே செய்யும், அதைவிடச் சிறப்பாக அருளின் பொருள் விளக்கமாக விளங்கும் சிறந்த பொருள் ஒன்று கொள்ள முடியும்.

அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தி னின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்! . .

பொருளுடையான் அருள் உணர்ச்சியுடையவனாகமக்கம் சமுதாயத்திற்குப் பயன்படும் வழியில் பயன்படுத்தத் தவறிவிடுவானானால் அவனுக்குச் சேய்மையில் விளங்கும் சமுதாயம், அவனை நினைத்துப் பார்க்கமாட்டாது.

அவனை ஒரு பொருளாக மதிக்கமாட்டாது. சமுதாயத் தின் மத்தியில் அவனைப் பற்றிய பேச்சு இருக்காது.

ஒரோ வழி இருந்தாலும் அது பேணுதற்குரிய பெருமையைத் தராது; சிறுமையையே தரும் அவ்வுலகம் என்பதற்குச் சமுதாயம் என்று பொருள் கொள்வதே ஐயத்திற்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாகவும், அரு ளுடைமை விளக்கத்தின் மையமாக இருக்கிற சமுதாயத் தைப்பற்றி நிற்பதாகவும் இருக்கிறது. இது சிறந்த கருத்தாகும். . - -

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள்

- . இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு. #

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/104&oldid=1276407" இலிருந்து மீள்விக்கப்பட்டது