பக்கம்:குறட்செல்வம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மேலும், பொருள் வருவதற்குரியனவாகக் கிடைத்து உள்ள வாய்ப்புக்களை இழக்காமல் முறையாகப் பயன் படுத்திப் பொருளிட்ட வேண்டும். வாய்ப்புக்களை இழப்பதும் கூடப் பொருள் இழப்பேயாகும்.

அதுபோல ஒரு களம் -அதற்குப் பயன்படுத்தக் கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் ஈட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்டவேண்டும். அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும். . -

பொருள் இழப்பு ஒற்றையல்ல-அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச் சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும். - : .

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை' என்பதைத் திருவள்ளுவர் 'புலால் மறுத்தல்' என்னும் அதிகாரத்தில் வைத்து விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துதற்கே யாம். . -- . -

திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல் அதிகாரத்தை துறவற இயலில் வைத்துள்ளார். ஆதலால், புஜால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்க மன்று என்று திருவள்ளுவர் கருதினார் போலும் எனக் கருதவும் இடமுண்டு. திருவள்ளுவர் இல்லற இயலிலும், குடியியலிலும் புலால் உண்ணாமையைக் கூறவில்லை. துறவிகள் அல்லாதார் புலால் உண்ணுதலுக்கு உடன்பட்டார் என்பது நமது கருத்து. . . . . . . . .

தற்போது உலகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள உணவுச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வு புலால் உண்ணுதலைப் பெருக்குதல் என்று அறிஞர்கள் கருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/108&oldid=1276410" இலிருந்து மீள்விக்கப்பட்டது