பக்கம்:குறட்செல்வம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கருமம் செய்வார் தவம் செய்வார்' என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும்.

மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்கிறார்கள், அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும் கேடு செய்கிறார்கள்.

இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு, அவா, வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து, மனித சமுதாயத்தை அலைக்கழிக் கின்றன. . . . . -

எல்லாவற்றிற்கும் மேலாக, கடமைகளைச் செய்தவன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தித் தகுதிப்படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து, பாவத்தை வினை வித்துக் கொள்கின்றனர். - - .

ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் ‘தவம்’ என்று கருதுகின்றார். இல்லறத் தாராக இருப்பாராயின் தமது மனைவி, மக்கள், சுற்றம் தழுவிப் பாதுகாத்து வாழ்தல் கடமை. -

துறவறத்தாராக இருப்பாராயின் மனித சமு தாயத்தையே தழுவி, அவர்கள் நன்னெறி நின்றொழுகி நல்லின்பத்தோடு வாழ சிந்தனையாலும் செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி, உலகியலை ஒழித்த தவம் என்று பொருள் கொள்ளுதல் சிறப்புடையதன்று. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/112&oldid=1276413" இலிருந்து மீள்விக்கப்பட்டது